Tuesday, May 10, 2016

தேவனின் கோவில் - அறுவடை நாள் - சுகா


இந்த பாட்ட பத்தி நான் என்ன எழுத? எழுதியதை திரும்ப திரும்ப வாசித்ததையே தருகிறேன்.

சுகா எழுதியது, உரிமையோடு பேஸ்ட் செஞ்சுகிறேன். கடைசியா நான்.

******************************************************************************


‘கதாநாயகியோட அம்மாவா நடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு நடிகைகளேதானே வளச்சு வளச்சு நடிக்காங்க! சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு அம்மாவத் தேடிப் புடிச்சு நடிக்க வச்சா என்ன?’ இந்த விபரீத ஆசை யின் தேடலில் ஒரு பெண்மணியின் புகைப்படம் கிடைத்தது. அச்சு அசலான நடுத்தரத் தமிழ்க்குடும்பத்து பெண்மணி. மதுரை மாவட்டத்தின் ஏதோ ஓர் பள்ளியின் ஆசிரியை.
‘நடிக்க வருவாங்களாப்பா?’
‘அவங்க ஹஸ்பண்டுக்கிட்ட பேசச் சொன்னாங்க, ஸார்.’
உதவி இயக்குனர் சொன்னார்.
‘அதுக்கென்ன? பேசிட்டா போச்சு. நம்பர் இருக்கா?’
‘இருக்கு ஸார்’.
‘குடு. பேசலாம்.’
‘னைன், எய்ட், த்ரீ, டூ . .’
‘என்ன பண்றாராம், ஸாரு?’
‘போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸார்’.
‘வடிவுக்கரசியம்மா டேட்ஸ் இருக்கான்னு செக் பண்ணுங்களென்’.
நொடிப்பொழுதில் முடிவை மாற்றினேன். ஆனால் தற்செயலாக பெயர் தெரியாத அந்த டீச்சரம்மாவின் வீடியோவைப் பார்க்க நேர்ந்தது. Staff roomஇல் சக டீச்சர்களின் கேலிச் சிரிப்பொலிகளுக்கிடையே, ‘டீச்சர் நல்லா பாடுவாங்க ஸார்’ என்ற குரலைத் தொடர்ந்து, ‘கொஞ்சம் அமைதியாத்தான் இருங்களென்’ என்று யாரோ சொல்கிறார்கள். முகம் முழுதும் பெருகிய வெட்கத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, கூச்சம் விலகாமல், தலை கவிழ்ந்தபடி, மேஜையில் கைகளை ஊன்றியபடி அந்த டீச்சர் பாட ஆரம்பிக்கிறார், ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே’. அவர் பாட ஆரம்பித்த அந்த நொடியில் என் மனம் கலங்க ஆரம்பித்தது. ஆனால் பாட்டு போகப் போக டீச்சரின் கூச்சம் மறைந்து அந்தப் பாடலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்தார். முகத்தில் அத்தனை துலக்கம். . ‘நானொரு சோக சுமைதாங்கி’ என்று சரணத்தைத் தொடங்கும் போது குரலில் அத்தனை உருக்கம். தலையைக் குனிந்தவாறே பாடியபடி ’மறந்தாதால்தானே நிம் . . . .மதி’ என்று முடித்துவிட்டு, வலிய வரவழைத்த சிரிப்புடன் நிமிர்ந்தார். ’டீச்சர் நல்லா பாடுவாங்க ஸார்’ என்று சொன்னவுடன், அவர் ஏன் இந்தப் பாடலைப் பாடினார்? இந்தப் பாடலைத் தவிர வேறெந்தப் பாடலைப் பாடியிருந்தாலும், அது இந்தளவுக்கு நம்மைக் கவர்ந்திருக்குமா என்று மனதுக்குள் பல கேள்விகள்.
‘அறுவடை நாள்’ திரைப்படத்தின் ‘தேவனின் கோயில்’ பாடல், வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது என்று சொன்னால் அது கொஞ்சமும் மிகையில்லை. நானாக அந்தப் பாடலைக் கேட்பது போக, டீச்சரைப் போல யாராவது ஒருவர் தேவனின் கோயிலுக்குள் இழுத்துச் சென்று விடுவர். சிலசமயங்களில் காரணமேயில்லாமல் சில பாடல்கள், நாள் முழுதும் நம் மனதைச் சுற்றி வருவது போல , ஒருநாள் ‘தேவனின் கோயில்’ பாடலைத் தொடர்ந்து நாள்முழுக்க முணுமுணுத்துக் கொண்டேயிருந்தேன். சொல்லிவைத்தாற்போல நண்பர் விக்கி, நெதெர்லேண்ட்ஸிலிருந்து ஃபோனில் அழைத்தார்.
‘சுகா, குருவி சேக்குற மாரி துட்டு சேத்து, குட்டியானை கணக்கா ஒரு பியானோ வாங்கியிருக்கென்’.
‘வாசிக்க ஆரம்பிச்சுட்டீங்களா, விக்கி?’.
‘பொறவு? அதே சோலிதானெ!’.
‘தேவனின் கோயில் வாசிச்சு பாருங்க’ .
சிலநொடிகள் மௌனம். ‘விக்கி, விக்கி. லைன் கட் ஆயிட்டா?’
‘என்ன சுகா இது அநியாயம்? அந்தப் பாட்டப் பத்திப் பேசத்தானெ ஒங்களக் கூப்பிட்டென். ரைட் ஹேண்ட் நோட்ஸ்லாம் ப்ராக்டிஸ் பன்ணிட்டென். லெஃப்ட் ஹேண்ட்ல பாஸ் கிதார் நோட்ஸ்தான் கைய ஒடிக்கி. எப்படியும் இன்னும் ஒரு மாசத்துல் வாசிச்சிருவ்வேன்னுதான் நெனைக்கென்’.
என்னைப் போலவே திருநவேலிக்காரரான விக்கி, வயலினும், பியானோவும் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர். ’தேவனின் கோயில்’ பாடலின் பாஸ்கிதார் பகுதிகளை ஒரு மாதத்தில் வாசித்து விடுவேன் என்று விக்கி சொன்னதில் அர்த்தமில்லாமலில்லை. பொதுவாகவே இளையராஜாவின் பாடல்களின் ஆதார அஸ்திவாரமே, பாஸ்கிதார்தான். ஒட்டுமொத்தப் பாடலின் கட்டுமானத்தையும் தாங்கிப் பிடிக்கும் பாஸ்கிதாரின் அற்புதமான வாசிப்பை ‘தேவனின் கோயில்’ பாடல் முழுவதும் நாம் கேட்கலாம். சினிமா பாட்டு கேட்பது தெய்வக்குற்றம் என்கிற அளவுக்கு கொள்கைப்பிடிப்புடைய கிறிஸ்டோஃபர் ஸார்வாள் தனது கிதார் பயிற்சியின் போது ‘தேவனின் கோயில்’ பாடலின் கிதார் பகுதிகளை, ரகசியமாக ரசித்து வாசித்ததை ஒருமுறை பார்த்திருக்கிறேன்.
திருநவேலியின் லாலா சத்திர முக்கில் இருக்கும் ‘சதன் டீ ஸ்டாலில்’ அதிகாலை நேரத்தில் நடிகர் திலகத்தின் குரலுடன் ‘அறுவடை நாள்’ பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். சிவாஜி ஃபிலிம்ஸின் தயாரிப்பு, அது. ‘ப்ரேமம் ப்ரேமாதி ப்ரேமப்ரியம் ப்ரேமவஸ்யப்ரேமம்’ என்று இளையராஜாவின் குரலில் அந்தப் பாடல் துவங்கும் போதே கணேசண்ணனின் கண்கள் கலங்கத் துவங்கும். சொல்லியிருந்த ’விவா டீ’ கைக்கு வரவும், கொஞ்சமும் கூச்சப்படாமல் தரையில் உட்கார்ந்து பாடலைக் கேட்க ஆரம்பிப்பான். பாட்டு முடிந்த பிறகுதான் கண்களைத் திறப்பான். ‘அண்ணாச்சி, இன்னொரு மட்டம் இந்தப் பாட்ட போடுங்களென்’ என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டு, என்னிடம் ‘தம்பி, இன்னொரு விவா டீ சொல்லென்’ என்பான். சதன் டீக்கடைக்காரர் கணேசனுக்கு மட்டும் ‘விவா டீ’க்கு பதிலாக, வேறேதும் ஊனா பானா கொடுத்துவிட்டாரோ என்று சந்தேகிக்கும் வண்ணம் பாடல் முடிந்ததும் கணேசண்ணன் பிதற்ற ஆரம்பிப்பான்.
‘இந்தப் பாட்ட எளுதுனவன், பாடுனவ, எசையமைச்சவன் எல்லாரயும் சுட்டுக் கொல்லணும்டெ. துஷ்டி வீட்டுக்கு வந்த மாரில்லா சவம் அளுக அளுகயா வருது. இன்னொரு மட்டம் கேட்டென்னா மூச்சு முட்டி செத்தே பெயிருவென்’.
ஆனாலும் அன்று மாலையே, ‘சதனுக்குப் போவோமா? தேவனின் கோயில் கேட்டுட்டு வருவோம்’ என்பான்.
கணேசண்ணன் சொன்னது போல, தேவனின் கோயில் பாடலோடு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரது பங்களிப்பும் அந்தப் பாடலை எங்கோ உயரத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. சித்ராவின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கை ‘தேவனின் கோயில்’ பாடல் ஆற்றியிருக்கிறது. மிக சன்னமான தொனியில் இந்தப் பாடலைப் பாடத் துவங்கும் அவர், இரண்டாவது சரணம் முடியும் இடமான ‘நானோர் கண்ணீர்க் காதலி’ என்னும் போது குரல் உடைந்து, அதேசமயம் ஸ்ருதிவிலகாமல் பாடி, கேட்பவரைக் கலங்க வைக்கிறார். அந்த சமயத்தில் முழுமையாக தமிழைப் புரிந்து கொண்டு பாடக்கூடியவராக சித்ரா இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ‘நானொரு சோக சுமைதாங்கி’ என்ற வரியிலும், ’கேட்டால் தருவேன் என்றவன் நீயே, கேட்டேன் ஒன்று தந்தாயா’ என்ற வரியிலும் அவரது குரலிலுள்ள உணர்ச்சியை கவனித்தால், ‘யாருப்பா சொன்னா அது மலையாளத்துப் பிள்ளன்னு? அது நயம் தமிளச்சில்லா’ என்று அடித்துச் சொல்லி விடலாம்.
இதுபோல ‘வாடி என் கப்பக்கிழங்கே’ பாடலாசிரியராகவே அதிகமாக அடையாளம் காட்டப்பட்டுவரும் கங்கை அமரனின் மிக முக்கியமான பாடல்களில் ஒன்று ‘தேவனின் கோயில்’. கன்னியாஸ்திரியாக மாறுவதற்கான பயிற்சியில் உள்ள ஒரு பெண் காதல்வயப்படுகிறாள். காதலனுடன் இணைய முடியவில்லை. இதை பாடலின் முதல் வரியிலேயே எவ்வளவு எளிமையாகச் சொல்லிவிடுகிறார்! ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே!’. காதலனுடன் இணைய முடியாத காதலியை, ‘பிரிந்தே வாழும் நதிக்கரை போல, தனித்தே வாழும் நாயகி’ என்கிறார், கங்கை அமரன். துக்கத்தின் விளிம்பில் நின்று அவள் தன்னைப் பற்றி ’ஒருவழிப்பாதை என் பயணம்’ என்று பாடியபடியே, ’இணைவது எல்லாம் பிரிவதற்காக, இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக, மறந்தால்தானே நிம்மதி’ விரக்தியின் உச்சத்தைச் சொல்கிறார்.
‘தேவனின் கோயில்’ பாடலின் இசையமைப்பை எடுத்துக் கொண்டால் அதன் மெட்டைச் சொல்வதா, வாத்தியங்களின் அமைப்பைச் சொல்வதா, அதன் தாளத்தைச் சொல்வதா, எதைச் சொல்வது என்று புரியவில்லை. மிக எளிமையாகச் சொல்வதாக இருந்தால் இது ஒரு சோகப்பாடல். ஆனால் பாடலின் துவக்கத்தைக் கேட்டால் ‘ப்ரேமம் ப்ரேமாதி’ என நவீனமான முறையில் பல்குரல் பதிவாக இளையராஜாவின் குரல் கேட்கிறது. பிறகு சித்ரா ’தேவனின் கோயில்’ எனத் துவங்கும் போதே நம் மனம் கனக்கத் துவங்குகிறது. ’இங்கு என் ஜீவன் தேயுதே’ என்னும் வரியில் தேயு . .தே என்கிற ஒரு வார்த்தையில், பின்னால் வர இருக்கும் இசை பூகம்பத்தை நமக்கு சொல்லாமல் உணர்த்திவிடுகிறார், இளையராஜா. பல்லவி முழுதும் தாளம் ஏதுமில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலின் முதல் இடையிசை (First interlude) தேவாலய மணியின் ஓசையுடன் துவங்கும் போதே, படம் பார்க்காமலேயே நம் கண்கள் முன்னால் காட்சி விரிகிறது. ‘அறுவடை நாள்’ திரைப்படத்தில் வரும் தேவாலயம், பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி வளாகத்திலுள்ள மிகப் பிரமாண்டமான தேவாலயம். ஒவ்வொரு முறை அந்தப் பக்கம் செல்லும் போதெல்லாம், அந்த தேவனின் கோயிலை சிலமணித்துளிகள் நின்று பார்ப்பது என் வழக்கம். ‘இதயெல்லாம் பாக்காமலயெ அந்த மனுஷன் எப்பிடித்தான் அப்பிடி ஒரு பாட்டு போட்டாரோ’ என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.
இப்படி ஒரு சோகப்பாடலுக்கு இளையராஜா அமைத்திருக்கும் தாளம், சற்றே துள்ளலானது. வழக்கமாக சோகரசம் தொனிக்கும் பாடலென்றால் பண்டிட் பாலேஷுக்கு ஃபோன் செய்து, ‘செவன் டூ ஒன் வந்திருங்க பாலேஷ்ஜி’ என்று ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து சொல்லி விடுவார்கள். அவரும் சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து கிளம்பும் போதே தானும் மூக்கைச் சிந்தி, தன் ஷெனாயுக்கும் மூக்கைச் சிந்தச் செய்து கைக்குட்டையால் துடைத்து, அழைத்துச் செல்வார். ‘பாலேஷ்ஜி, ஒரு நாலு பார் ஹைபிட்ச்ல வாசிச்சு ஃபில் பண்ணிருங்க’ என்பார்கள். ஆனால் ‘தேவனின் கோயில்’ பாடலில் ஷெனாய்க்கு வேலையில்லை. இது போன்ற சோக கீதங்களில் கிட்டத்தட்ட ஷெனாயின் வேலையைச் செவ்வனே செய்திடும் புல்லாங்குழலும் நவீனமாகக் கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்விரு வாத்தியங்களின் வேலையையும் இந்தப் பாடலில் கிதார் எடுத்துக் கொள்கிறது. முதல் இடையிசையின் முடிவில் ’நானொரு சோக சுமைதாங்கி’ என்று பாடலின் மிக முக்கியமான பகுதியை சித்ரா துவக்குவதற்கு வசதியாக ’இந்தா புடிச்சுக்கோ, மகளே’ என்று தளம் அமைத்துக் கொடுக்கிறது, கிதார். பாடலின் துவக்கத்தில் பலகுரல்களாக ஒலித்த இளையராஜாவின் குரல், இரண்டாவது இடையிசையில் தெம்மாங்காக உச்சஸ்தாயியில் உற்சாகமாக ஒலிக்கிறது. ஆனால் எந்த வகையிலும் அந்த துள்ளலொலி பாடலின் மைய உருவைக் குலைக்கவில்லை. இது போன்ற நம்ப முடியாத இசை ஆச்சரியங்களெல்லாம் இளையராஜாவிடம் மட்டுமே சாத்தியம்.
ஒருநாள் திரைப்பட இயக்குனரும், நடிகருமான நண்பர் அழகம்பெருமாள் சொன்னார்.
‘வே, அத ஏன் கேக்கேரு? ராத்திரி சரக்கப் போட்டுட்டு ஒளுங்கா மரியாதயா செவனேன்னு கட்டய சாத்துறத விட்டுட்டு தேவனின் கோயில் பாட்டக் கேக்கலாமாய்யா? சவம் காலச் சுத்துன பாம்பா விடிய விடிய கொன்னு எடுத்துட்டுல்லா. படுக்கும் போது மணி என்னங்கேரு? காலைல எட்டர. ஒரு சினிமாப் பாட்டு இப்பிடியாவே மனச அறுக்கும். ச்ச்சை’.
கணேசண்ணன், கிறிஸ்டோஃபர் ஸார்வாள், பெயர் தெரியாத அந்த டீச்சர், சகோதரர் விக்கி, நண்பர் அழகம்பெருமாள் என யாராவது ஒருவர் அவ்வப்போது என்னை ‘தேவனின் கோயில்’ பாடலுக்குள் இழுத்துச் சென்று விட்டு விடுவார்கள். நானும் கொஞ்ச நாட்களுக்கு அதற்குள்ளேயே கிடப்பேன். கடந்த ஒருவாரகாலமாக ‘தேவனின் கோயில்’ பாடலை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த முறை, இப்படி ஒரு கட்டுரை எழுதிவிடும் அளவுக்கு என்னை ‘தேவனின் கோயிலுக்குள்’ கொண்டு போய் விட்டு, கதற வைத்தது யார் என்று தீவிரமாக யோசித்து, சற்று சிரமப்பட்டே விடையைக் கண்டுபிடித்தேன். அது வேறு யாருமல்ல. நானேதான்.
- See more at: http://solvanam.com/?p=22579

******************************************************************************
நான்: இந்த படத்தை பற்றி முன்பு ஒரு தடவை எழுதியது இங்கே. இந்த பாட்டை கேட்கும் போதும் சரி, கேட்கலாம்னு நினைக்கும் போதே சரி, ஒரு வித சோகம் படரும். சந்தோஷமாக இருக்கும் தருனமும் சோகம் அப்பிக்கொள்ளும். ஒரு விதத்தில் இந்த பாடல் பல பாடல்களில் முக்கியமான மற்றும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதும் கூட. அதனாலே பலவாறு அழுத்தும் பாடல்.

இந்த பாடலை பொருத்த வரை சித்ராவின் குரல், உலகின் மிக மென்மையான கத்தியை வைத்து மெல்ல மெல்ல அறுப்பதற்கு சமம்.

ஆனா, இது டைட்டில் சாங்(?). அதனாலே எந்த சேனலிலும் பார்க்கவே முடியாது. படத்தை போட்டால் தான் உண்டு. இந்த படம் ராஜ் டிவியிடம் உரிமை உள்ளது, அதனால் அவர்கள் சேனலில் மட்டும் பார்க்கலாம். வருடத்திற்கு ஒரு முறையாவது ஒளிபரப்புவார்கள்.

ஒரு பாடலாசிரியரா கங்கை அமரனை நாம் ரொம்பவும் பயன்படுத்திக்கொள்ளவில்லையோ என்னவோ. இந்த பாடல் மட்டும் அல்ல, பல அற்புதமான பாடல்களை எழுதியிருக்கிறார். இன்னும் சரக்கு இருக்கிறது. மங்காத்தா, பிரியாணி-ல கூட எழுதியிருக்கிறார்.

பாடல்: தேவனின் கோவில்
படம்: அறுவடை நாள்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா, சித்ரா

ப்ரேமம் ப்ரேமாதிப் ப்ரேமப்பிரியம் ப்ரேம வஷ்யப் ப்ரேமம்
ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம்
ப்ரியம் ப்ரியமாதிப் ப்ரீத்தித்த ப்ரேமம் ப்ரீத்திவஷ்ய ப்ரீத்தம்
ப்ரீத்தம் ப்ரீத்தம் ப்ரீத்தம் ப்ரீத்தம் ப்ரீத்தம்
குமம் கும்கும் குங்குமம் தந்தோம்
தந்துனா மமஜீவனம் மமஜீவனம் மமஜீவனம்
மகம் கல்யம் மாங்கல்யம் தந்தோம்
மங்களா மமஜீவிதம் மமஜீவிதம் மமஜீவிதம்
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ஷாந்தி!

தேவனின் கோவில் மூடிய நேரம்
நானென்ன கேட்பேன் தெய்வமே?
இன்று என் ஜீவன் தேயுதே!
என் மனம் ஏனோ சாயுதே!

நானொரு சோக சுமைதாங்கி
துன்பம் தாங்கும் இடிதாங்கி
பிரிந்தே வாழும் நதிக்கரை போல
தனித்தே வாழும் நாயகி!

இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி!

(தேவனின் கோவில்)

ஒருவழிப்பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்
கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா?

ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
அழுதிடக் கண்ணில் நீருக்குப் பஞ்சம்
நானோர்க் கண்ணீர்க் காதலி!

(தேவனின் கோவில்)Monday, April 27, 2015

மாஞ்சா போட்டு தான் - மான் கராத்தே


படம்: மான் கராத்தே
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
இசை, பாடியவர்: அனிருத் ரவிச்சந்தர்

பொதுவா பலவகை பேச்சுத்தமிழும் ரசிக்கக்கூடிய ஆள் நான். அதுவும் சென்னையில் வாழ ஆரம்பித்த பிறகு சென்னைக்கே உரிய தமிழ் வழக்கும் ரொம்பவே பிடித்து போனது. காரணம், சென்னை பிடிக்கும் என்பதால் இருக்கலாம். தென் சென்னையில் இந்த தமிழ் கொஞ்சம் அந்நியம் என்றாலும், வட சென்னை ஏரியா தான் இந்த தமிழுக்கு ஃபுல் அத்தாரிட்டி.

சென்னை பாஷையில் பாடல்கள எழுத ஆரம்பித்தது மனோரமா காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. (இல்ல, அதுக்கும் முன்னமேவா? என்.எஸ்.கே காலத்துல?)

உதா, 1968-ல் வாலி எழுதிய பொம்மலாட்டம் திரைப்படப் பாடல்.

வா வாத்யாரே ஊட்டாண்டே - நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்

வாலி தான் இதோட ஸ்டார்ட்டிங்னு நெனக்கிறேன். இல்ல, அதுக்கு மின்னாடியும் இப்டி யாராச்சும் எய்திக்கீறாங்களா? தெர்லப்ப்ப்பா.

இது சமீபத்தில் வந்த பாட்டு. அந்த காலத்து மாதிரி இல்லைங்கிற சொலவடை மாதிரி அந்த பாட்டு மாதிரி இல்லைனு சொல்லலாம் தான். ஆனா, இந்த பாட்டு எனக்கு ரொம்பவே பிடிச்சது.

சமீபத்தில் வந்த 'மெர்சலாயிட்டேன்' கூட மெர்சலா இல்ல. கபிலன் வரிகள் நல்லா இருந்தாலும், என்னவோ எனக்கு அந்த பாடல் ஒட்டவே இல்ல. ஷங்கர் படத்துல குப்பை கூட செம ரிச்சா இருக்கும். இந்த பாட்டு கூட அப்படித்தான் இருந்தது.

பட், இந்த பாட்டு, செம.

இந்த பாடலில் நான் ரசித்தது

முதலில் மெட்ராஸ் பாஷை. அது ஒரு சுகானுபவம் ;) அதை சரிவர கையாள்வது மெட்ராஸ்காரங்களால தான் முடியும். அனிருத், மதன் கார்க்கி இந்த ஊர்காரங்கங்கிறதுனால கொஞ்சம் ஈஸியா இருந்திருக்கும்.

இரண்டாவது, இந்த பாடலை பாடியிருக்கும் அனிருத். வெண்ணையில் மேல் சூடான கத்தி வைத்தால் அது அப்படியே வழுக்கி விழுமே அப்படி ஒரு சாப்ட்டா பாடியிருப்பது அற்புதம். இன்னும் சொல்லப்போனால், டாம் & ஜெர்ரியில், ஜெர்ரியில் பேக் ஃபையர் ஆகி அது சூடாக சீஸ் மேல் உட்காரும் போது, அப்படியே வழுக்கி இறங்குமே, அது போல.

முக்கியமா, '...ங்கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்'. அந்த வார்த்தையை ஒரு வரியின் முதல் வார்த்தையா உபயோகித்திருப்பது 'ங்கொய்யால சூப்பர்'-னு தான் சொல்லனும். 'அட நான் ங்கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்' தான் மொத்த வரி. 'நான்'-க்கு அப்புறம் இழுத்து, கொஞ்சம் விட்டு 'ங்கொய்யால இப்ப காதல் வந்து அடுறேன்'-னு வந்திருப்பது பிடித்திருந்தது.

அப்புறம், இந்த பாடல் படமாக்கியிருக்கும் க்யூட்னஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஸ்லோ மோஷனில், முக்கியமாக எனக்கு பிடித்த மஞ்சள் கலர் விஷயங்கள் நிறைய இருக்கும்.

இன்னொன்னு, ஹன்சிகா ரொம்ப எக்ஸ்போஸ் செய்யாமலிருப்பதும் நல்லா இருந்துச்சு.

பாடல் வரிகள்

மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா

ஹே குச்சி ஐஸுல எச்சி வச்சவ பிச்சி என்ன தின்னா
ஹே ஹே ஹே ஹோலி கண்ணுல பீலிங் காட்டி தான் காலி காலி பண்ணா

ஹே பிக்காலியா...ரோட்டு மேலே பாடவிட்டு
தக்காளியா...என்ன உருட்டி விட்டா

ஹே நாஸ்டா துன்னுட்டு நீட்டா தூங்குவேன் - நான்
ங்கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்

தா

தஜும்த கிடததா தஜும்த கிடததா
தஜும்த கிடததா தஜும்த கிடததா

தஜும்த கிடததா தஜும்த கிடததா
தஜும்த கிடததா தஜும்த கிடததா

தஜும்த கிடததா தஜும்த கிடததா
தஜும்த கிடததா தஜும்த கிடததா

தஜும்த கிடததா தஜும்த கிடததா
தஜும்த கிடததா தஜும்த கிடததா

ஹே மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா
ஹே ஹே ஹே மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா

ஒ மாமா Come to my baby won’t you come right now
we can fed it out in the sun
we can burn it up and heat it up and take it down gonna-be crazy am super fun

(ஒ மாமா...)

ஒன் பிட்ச் கேட்ச்சில காதல் பிட்ச்சில காஜி ஆடி நின்னேன்
லா பால் ஒண்ணுல மிடில் ஸ்டம்ப்புல ஏண்டி போல்டு பன்ன?

ஹே யாக்கர் ஏத்தினேன் யாத்தே செக்சியா சிக்சர் தூக்கி வுட்டா
ஹே ஹே ஹே லோட்டாங்கையில நெஞ்ச கிழிச்சு தான் காமடி ஆக்கி புட்டா

டும்மாங்கோலி...யா நான் இங்க நின்...னேன்
குந்திட்டு போ...னா நான் என்ன பன்...னேன்

ஓடு கைத நாங்க பீட்டரு
நீ மைதா கோந்து போஸ்ட்டரு
அவ்ளோதான் நம்ம மேட்டரு - அட நான்
ங்கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்

தா

தஜும்த கிடததா தஜும்த கிடததா
தஜும்த கிடததா தஜும்த கிடததா

தஜும்த கிடததா தஜும்த கிடததா
தஜும்த கிடததா தஜும்த கிடததா

மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா

ஒ மாமா Come to my baby won’t you come right now
we can fed it out in the sun
we can burn it up and heat it up and take it down gonna-be crazy am super fun

(ஒ மாமா...)

தா

தஜும்த கிடததா தஜும்த கிடததா
தஜும்த கிடததா தஜும்த கிடததா

தஜும்த கிடததா தஜும்த கிடததா
தஜும்த கிடததா தஜும்த கிடததாகடைசியா, 'லா பால் ஒண்ணுல மிடில் ஸ்டம்ப்புல ஏண்டி போல்டு பன்ன?' - இந்த லைன் வரும்போது கோரியோகிராபிய நோட் பன்னுங்க. அர்த்தமே வேற... ;)

Tuesday, July 5, 2011

வெண்மேகம் பெண்ணாக - யாரடி நீ மோகினி


எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. தெலுங்கில் செல்வராகவன் இயக்கி, யுவன் இசையமைத்து ஹிட்டடித்த படம். தமிழில் செல்வாவின் உதவி இயக்குநர் ஜவகர் இயக்கிய படம். படத்தை இன்னும் முழுசாக பார்க்கவில்லை. ஆனாலும், இந்த பாடல் பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது.

முக்கிய காரணம் இருவர். ஹரிகரன் மற்றும் நா.முத்துக்குமார்.

பாடலின் வரிகள் அற்புதமாக இல்லை. அதாவது நா.முத்துக்குமாரின் மற்ற அற்புதமான பாடல் வரிகளைப்போல இல்லை. ஆனால், தாளம் இனிமையாக மெதுவாக செல்கிறது. மெதுவாக செல்லும் இந்த தாளம் தான் இந்த பாடலில் மிகப்பெரிய ப்ளஸ். மற்றும் ஹரிகரனின் குரல், இந்த பாடலுக்கு நச்சென பொருந்தி போகிறது. 'உயிரே உயிரே' பாடலில் கூட எனக்கு அவ்வளவாக அவர் குரல் பிடித்ததில்லை.

ஒரு முறை சென்னை மின்சார இரயிலில் சென்றுகொண்டிருந்த பொழுது நடந்தது. என் அருகில் சில கல்லூரி மாணவர்கள் அமர்ந்து சென்னை பாஷையில் சத்தம் போட்டு பேசிக்கொண்டிருந்தனர். எங்கள் இருக்கையில் எதிர்ப்பக்க மூலையில் இருவர் இந்த பாடலை தங்கள் கைப்பேசியில் ஏதோ ஒரு எஃப்.எம்.மில் இருந்து கசிந்து விட்டபடி எங்கள் பயணம் தொடர்ந்தது. என் அருகில் இருந்தவர்கள் பேசியபேச்சில் என்னால பாட்டையும் முழுசாக கேட்கவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் என் அருகில் இருந்தவர்கள் தாங்கள் பேசுவதை குறைத்துக்கொண்டனர். பின் அப்படியே நிறுத்தியும் விட்டனர். எனக்கோ ஆச்சரியம். அந்த பாடலில் இருந்து "என் காதலும் என்னாகுமோ. உன் பாதத்தில் மண்ணாகுமோ" என்ற வரிகள் வரும் போது அவர்களும் தங்களை மறந்து கூடவே பாட ஆரம்பித்துவிட்டனர். எல்லோரையும் கரைத்துவிட்ட பாடலிது.

அப்புறம் சிற்சில விஷயங்கள் இந்த பாடலின் விஷுவலில் இருக்கும். உதா, நாயகி பால் குடித்துவிட்டு வந்த மீசையை பற்றி இருவரும் கண்களாலேயே பேசிக்கொள்வது, 'ஒன்றா, இரண்டா உன்னழகை பாட' என்ற இடத்தில் எடிட்டிங்.

'பெண்ணே என்னடி, உண்மை சொல்லடி' - சொல்லடி என்று இடத்தில் 'சொ' என்ற வார்த்தைக்கு முன் ஒரு 'ஸ்' வரும். 'உண்மை ஸ்சொல்லடி' என்று. இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்தமானது.

முக்கியமாக கவனித்து பாருங்கள். இந்த பாடல் தாளத்துடன் ஒட்டாது. சில மைக்ரோ செகண்டுகள் வித்தியாசம் இருக்கும். பாடுபவரின் குரல் சில மைக்ரோ செகண்டுகள் delay ஆகும்.

இந்த பாடலின் interlude-ல் வரும் இசை பிரமாதம்.

கேட்டிராதவர்கள் கேட்டு பின் பாருங்கள், பார்த்தவர்கள் மீண்டும் பாருங்கள்.

பாடல்வரிகள்

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனை பார்த்து விளையாடுதோ (வெண்மேகம்)

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே... (உன்னாலே)

வார்த்தை ஒரு வார்த்தை
சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை
பார்த்தால் என்ன?

(உன்னாலே)
(வெண்மேகம்)

மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னை கண்டவரை கண் கலங்க நிற்கவைக்கும் தீ
பெண்ணே என்னடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண் இனமே கோவப்பட்டதென்னடி?

தேவதை வாழ்வது வீடில்லை கோவில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா
உன் அழகை பாட

கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்

(உன்னாலே)

எந்தன் மனதை கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ

(வெண்மேகம்)

படம்: யாரடி நீ மோகினி
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: ஹரிகரன்

கானொளி


Monday, December 6, 2010

நினைத்து நினைத்து பார்த்தேன் - 7ஜி ரெயின்போ காலனி


7ஜி ரெயின்போ காலனி

இந்த படத்தில் உள்ள எல்லா பாடல்களுமே ஸ்பெஷல் தான். இது யுவன் + செல்வா + நா.முத்துக்குமாரின் கூட்டனி. அட்டகாசமான பாடல்கள்.

இந்த பாடலின் ஆரம்ப இசைகோர்வை மட்டும் சுமார் 1 நிமிடங்கள் வரும். மேலும் இடையில் வரும் interlude-ம் அருமையான BGM. கேட்டுப்பாருங்கள். இந்த பாடலின் மைனஸ் என்று பார்த்தால், தமிழ் தெரியாத ஒருத்தர் தான் பாடியிருக்கிறார் என்று சுலபமாக அறிந்திட முடியும். ஆனால், தன் குரலால் அந்த மைனஸும் ப்ளஸ்ஸாக்கி விடுகிறார் ஷ்ரேயா...

இந்த பாடல் படத்தில் இரண்டு முறை வரும். இரண்டுமே சோகப்பாடல்கள். முதலில் காதலியின் மறைவை அடுத்து காதலன் உருக்கமாகப்பாடும் பாடல். பாடியது கே.கே. விரக்தியில் விளிம்பில், தற்கொலை எண்ணத்துடன் இருக்கும் காதலன், காதலியின் நினைவு அவனை கொல்ல, அவன் பாடுவதாய் எழுதியிருப்பார் நா.முத்துக்குமார்.

பின் சிலமுறை தற்கொலை முயற்சி செய்வான். ஒரு கட்டத்தில் காதலி அவன் முன் வந்து 'தற்கொலை எண்ணம் வேண்டாம். தற்கொலை செய்தால் என்னை பற்றின நினைவுகளும் அழிந்துவிடும். என் நினைவுடன் வாழ்' என்று புத்தி சொல்வதாய் அமைந்த பாடல் 'செல்லம்' ஷ்ரேயா கோஷல் பாடிய பாடல், இன்னொரு 'நினைத்து நினைத்து பார்த்தேன்'.

இரண்டு பாடலையும் அருகருகே வைத்து படித்து பார்த்தால் அர்த்தம் விளங்கும்.

"நாம் அமர்ந்து பேசிய மரங்களின் நிழல் உன்னை கேட்டால் எப்படி சொல்வேன்? உதிர்ந்து போன மலரை போலவா?" என்கிறான் அவன். "காலம் முழுவதும் சொல்லும், அந்த மலரின் வாசமாய்" என்கிறாள் அவள்.

"உடைந்து போன வளையல் பேசுமா?" என்கிறான் அவன். "அது தன் வண்ணங்களால் பேசும்" என்கிறாள் அவள்.

"உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் எங்கே?" என்கிறான் அவன். "உந்தன் கையில் கலந்திருக்கும்" என்கிறாள் அவள்.

"பேசிய வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்" என்கிறான் அவன். "அவை உனது பேச்சில் கலந்து இருக்கும்" என்கிறாள் அவள்.

"நீ பார்த்து போன பார்வைகள் எங்கே என்று கேள்வி கேட்கும்" என்கிறான் அவன். "அவை உன்னுடனே இருக்கும்" என்கிறாள் அவள்.

"ஒரு தருணம் எதிரின் தோன்றுவாய் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன்" என்கிறான் அவன். "ஒரு தருணம் என்ன? உன்னுள் எப்பொழுதும் இருக்கிறேன்" என்கிறாள் அவள்.

முதல் பாடலின் காதலனால் கேட்கப்படும் கேள்விக்கு இரண்டாம் பாடலில் விடையாக காதலி பாடுவதாக அமைந்திருக்கும் இந்த பாடல், என் ஆல்-டைம் ஃபேவரைட். இரண்டு பாடலையும் அருகருகே இருந்தால் உங்களுக்கும் புரியும்.

கே.கே.ஷ்ரேயா கோஷல்
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே
எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் உனக்குக் கண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
(நினைத்து நினைத்து பார்த்தேன்)(நினைத்து நினைத்து பார்த்தால்)
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா?
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமாய்…
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா?
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமாய்…
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே?
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு
(நினைத்து நினைத்து பார்த்தேன்)(நினைத்து நினைத்து பார்த்தால்)
பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கறையும் வார்த்தை கறையுமா?
பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா?
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழியும் என்னை மறக்குமா…
தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்
வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
திருட்டுப் போன தடயம் இருந்தும்
திரும்பி வருவேன் நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்
ஒரு தருணம் என்னடா காதலா
உன்னுள் வாழ்கிறேன்

கே.கே.ஷ்ரேயா கோஷல்நன்றி: Truth

Yuvan Live in Cencert: Chennai-யில் ஷ்ரேயா கோஷல் பாடியது...
From 6:00

Wednesday, December 1, 2010

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே - ஜூலி கணபதி


இந்த பாடல் எனக்கு அறிமுகமானது ஒரு நண்பன் மூலமாக. அவனும் இதை போன்ற பாடல்களின் ரசிகன். முதல் முறை கேட்ட போது அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால், கேட்க கேட்க மிகவும் பிடித்துப்போன பாடல்.

இந்த பாடலின் விஷுவல் பார்த்ததும், படத்தில் இந்த பாடல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. படத்தின் பெயர் ஜூலி கணபதி. படத்தை இன்னும் பார்க்கவில்லை. மழைக்காலத்தில் காரோட்டும் ஒருவர் காரின் வானொலியில் பாடல் பாடுவதாக அமைந்த பாடல். வெளியே பெய்யும் மழையும் அதன் சத்தமும்(!) காருக்குள் புகாதபடி தனி ஆவர்த்தனம் செய்யும். படத்தில் இந்த பாடலுக்கு ஒன்றும் வேலையில்லை என்றாலும், பாடல் முடியும் போது நாயகன் செல்லும் கார் விபத்தில் முடியும்.

இந்த பாடலின் மிகப்பெரிய பலம், ஷ்ரேயா கோஷல். இளையராஜாவின் கேட்ட பிறகு அவரின் குரலுக்கு ரசிகனாகி போனேன். என்ன! ஒரே பிரச்சினை...தமிழ் உச்சரிப்பு. "என்னை பிடித்த நிலுவ்வு", "மனது வள்த்த சோலையில்", போன்றவற்றை சகித்துக் கொள்ள வேண்டும்...

காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே

இந்த வரிகளை எப்படி எடுத்துக் கொள்வது?

1. காதல் (என்பது) நோய்க்கு மருந்து தந்து நோயை கூட்டுமா?

இல்லை

2. இதற்கு முந்தைய வரிகளை எடுத்து கொண்டு, நிலவானது காதல் என்னும் நோய்க்கு மருந்தை தந்து அந்த நோயை கூட்டும்


மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்


மேகத்தை போன்ற மோகமா? இல்லை, மோகத்தை வளர்த்து விட்டு கலைந்து போகும் மேகம் போலவா?பாடல் வரிகள்

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே

உதிர்வது... பூக்களா..?

மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

(எனக்குப் பிடித்த பாடல்)

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்

காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே

வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்

காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.
(எனக்குப் பிடித்த பாடல்)

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர
அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய்
அன்பிலே நணைக்கிறாய்

மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்

(எனக்குப் பிடித்த பாடல்)