Monday, April 27, 2015

மாஞ்சா போட்டு தான் - மான் கராத்தே


படம்: மான் கராத்தே
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
இசை, பாடியவர்: அனிருத் ரவிச்சந்தர்

பொதுவா பலவகை பேச்சுத்தமிழும் ரசிக்கக்கூடிய ஆள் நான். அதுவும் சென்னையில் வாழ ஆரம்பித்த பிறகு சென்னைக்கே உரிய தமிழ் வழக்கும் ரொம்பவே பிடித்து போனது. காரணம், சென்னை பிடிக்கும் என்பதால் இருக்கலாம். தென் சென்னையில் இந்த தமிழ் கொஞ்சம் அந்நியம் என்றாலும், வட சென்னை ஏரியா தான் இந்த தமிழுக்கு ஃபுல் அத்தாரிட்டி.

சென்னை பாஷையில் பாடல்கள எழுத ஆரம்பித்தது மனோரமா காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. (இல்ல, அதுக்கும் முன்னமேவா? என்.எஸ்.கே காலத்துல?)

உதா, 1968-ல் வாலி எழுதிய பொம்மலாட்டம் திரைப்படப் பாடல்.

வா வாத்யாரே ஊட்டாண்டே - நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்

வாலி தான் இதோட ஸ்டார்ட்டிங்னு நெனக்கிறேன். இல்ல, அதுக்கு மின்னாடியும் இப்டி யாராச்சும் எய்திக்கீறாங்களா? தெர்லப்ப்ப்பா.

இது சமீபத்தில் வந்த பாட்டு. அந்த காலத்து மாதிரி இல்லைங்கிற சொலவடை மாதிரி அந்த பாட்டு மாதிரி இல்லைனு சொல்லலாம் தான். ஆனா, இந்த பாட்டு எனக்கு ரொம்பவே பிடிச்சது.

சமீபத்தில் வந்த 'மெர்சலாயிட்டேன்' கூட மெர்சலா இல்ல. கபிலன் வரிகள் நல்லா இருந்தாலும், என்னவோ எனக்கு அந்த பாடல் ஒட்டவே இல்ல. ஷங்கர் படத்துல குப்பை கூட செம ரிச்சா இருக்கும். இந்த பாட்டு கூட அப்படித்தான் இருந்தது.

பட், இந்த பாட்டு, செம.

இந்த பாடலில் நான் ரசித்தது

முதலில் மெட்ராஸ் பாஷை. அது ஒரு சுகானுபவம் ;) அதை சரிவர கையாள்வது மெட்ராஸ்காரங்களால தான் முடியும். அனிருத், மதன் கார்க்கி இந்த ஊர்காரங்கங்கிறதுனால கொஞ்சம் ஈஸியா இருந்திருக்கும்.

இரண்டாவது, இந்த பாடலை பாடியிருக்கும் அனிருத். வெண்ணையில் மேல் சூடான கத்தி வைத்தால் அது அப்படியே வழுக்கி விழுமே அப்படி ஒரு சாப்ட்டா பாடியிருப்பது அற்புதம். இன்னும் சொல்லப்போனால், டாம் & ஜெர்ரியில், ஜெர்ரியில் பேக் ஃபையர் ஆகி அது சூடாக சீஸ் மேல் உட்காரும் போது, அப்படியே வழுக்கி இறங்குமே, அது போல.

முக்கியமா, '...ங்கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்'. அந்த வார்த்தையை ஒரு வரியின் முதல் வார்த்தையா உபயோகித்திருப்பது 'ங்கொய்யால சூப்பர்'-னு தான் சொல்லனும். 'அட நான் ங்கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்' தான் மொத்த வரி. 'நான்'-க்கு அப்புறம் இழுத்து, கொஞ்சம் விட்டு 'ங்கொய்யால இப்ப காதல் வந்து அடுறேன்'-னு வந்திருப்பது பிடித்திருந்தது.

அப்புறம், இந்த பாடல் படமாக்கியிருக்கும் க்யூட்னஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஸ்லோ மோஷனில், முக்கியமாக எனக்கு பிடித்த மஞ்சள் கலர் விஷயங்கள் நிறைய இருக்கும்.

இன்னொன்னு, ஹன்சிகா ரொம்ப எக்ஸ்போஸ் செய்யாமலிருப்பதும் நல்லா இருந்துச்சு.

பாடல் வரிகள்

மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா

ஹே குச்சி ஐஸுல எச்சி வச்சவ பிச்சி என்ன தின்னா
ஹே ஹே ஹே ஹோலி கண்ணுல பீலிங் காட்டி தான் காலி காலி பண்ணா

ஹே பிக்காலியா...ரோட்டு மேலே பாடவிட்டு
தக்காளியா...என்ன உருட்டி விட்டா

ஹே நாஸ்டா துன்னுட்டு நீட்டா தூங்குவேன் - நான்
ங்கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்

தா

தஜும்த கிடததா தஜும்த கிடததா
தஜும்த கிடததா தஜும்த கிடததா

தஜும்த கிடததா தஜும்த கிடததா
தஜும்த கிடததா தஜும்த கிடததா

தஜும்த கிடததா தஜும்த கிடததா
தஜும்த கிடததா தஜும்த கிடததா

தஜும்த கிடததா தஜும்த கிடததா
தஜும்த கிடததா தஜும்த கிடததா

ஹே மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா
ஹே ஹே ஹே மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா

ஒ மாமா Come to my baby won’t you come right now
we can fed it out in the sun
we can burn it up and heat it up and take it down gonna-be crazy am super fun

(ஒ மாமா...)

ஒன் பிட்ச் கேட்ச்சில காதல் பிட்ச்சில காஜி ஆடி நின்னேன்
லா பால் ஒண்ணுல மிடில் ஸ்டம்ப்புல ஏண்டி போல்டு பன்ன?

ஹே யாக்கர் ஏத்தினேன் யாத்தே செக்சியா சிக்சர் தூக்கி வுட்டா
ஹே ஹே ஹே லோட்டாங்கையில நெஞ்ச கிழிச்சு தான் காமடி ஆக்கி புட்டா

டும்மாங்கோலி...யா நான் இங்க நின்...னேன்
குந்திட்டு போ...னா நான் என்ன பன்...னேன்

ஓடு கைத நாங்க பீட்டரு
நீ மைதா கோந்து போஸ்ட்டரு
அவ்ளோதான் நம்ம மேட்டரு - அட நான்
ங்கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்

தா

தஜும்த கிடததா தஜும்த கிடததா
தஜும்த கிடததா தஜும்த கிடததா

தஜும்த கிடததா தஜும்த கிடததா
தஜும்த கிடததா தஜும்த கிடததா

மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா

ஒ மாமா Come to my baby won’t you come right now
we can fed it out in the sun
we can burn it up and heat it up and take it down gonna-be crazy am super fun

(ஒ மாமா...)

தா

தஜும்த கிடததா தஜும்த கிடததா
தஜும்த கிடததா தஜும்த கிடததா

தஜும்த கிடததா தஜும்த கிடததா
தஜும்த கிடததா தஜும்த கிடததா



கடைசியா, 'லா பால் ஒண்ணுல மிடில் ஸ்டம்ப்புல ஏண்டி போல்டு பன்ன?' - இந்த லைன் வரும்போது கோரியோகிராபிய நோட் பன்னுங்க. அர்த்தமே வேற... ;)