Wednesday, December 1, 2010

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே - ஜூலி கணபதி


இந்த பாடல் எனக்கு அறிமுகமானது ஒரு நண்பன் மூலமாக. அவனும் இதை போன்ற பாடல்களின் ரசிகன். முதல் முறை கேட்ட போது அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால், கேட்க கேட்க மிகவும் பிடித்துப்போன பாடல்.

இந்த பாடலின் விஷுவல் பார்த்ததும், படத்தில் இந்த பாடல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. படத்தின் பெயர் ஜூலி கணபதி. படத்தை இன்னும் பார்க்கவில்லை. மழைக்காலத்தில் காரோட்டும் ஒருவர் காரின் வானொலியில் பாடல் பாடுவதாக அமைந்த பாடல். வெளியே பெய்யும் மழையும் அதன் சத்தமும்(!) காருக்குள் புகாதபடி தனி ஆவர்த்தனம் செய்யும். படத்தில் இந்த பாடலுக்கு ஒன்றும் வேலையில்லை என்றாலும், பாடல் முடியும் போது நாயகன் செல்லும் கார் விபத்தில் முடியும்.

இந்த பாடலின் மிகப்பெரிய பலம், ஷ்ரேயா கோஷல். இளையராஜாவின் கேட்ட பிறகு அவரின் குரலுக்கு ரசிகனாகி போனேன். என்ன! ஒரே பிரச்சினை...தமிழ் உச்சரிப்பு. "என்னை பிடித்த நிலுவ்வு", "மனது வள்த்த சோலையில்", போன்றவற்றை சகித்துக் கொள்ள வேண்டும்...

காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே

இந்த வரிகளை எப்படி எடுத்துக் கொள்வது?

1. காதல் (என்பது) நோய்க்கு மருந்து தந்து நோயை கூட்டுமா?

இல்லை

2. இதற்கு முந்தைய வரிகளை எடுத்து கொண்டு, நிலவானது காதல் என்னும் நோய்க்கு மருந்தை தந்து அந்த நோயை கூட்டும்


மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்


மேகத்தை போன்ற மோகமா? இல்லை, மோகத்தை வளர்த்து விட்டு கலைந்து போகும் மேகம் போலவா?



பாடல் வரிகள்

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே

உதிர்வது... பூக்களா..?

மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

(எனக்குப் பிடித்த பாடல்)

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்

காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே

வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்

காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.
(எனக்குப் பிடித்த பாடல்)

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர
அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய்
அன்பிலே நணைக்கிறாய்

மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்

(எனக்குப் பிடித்த பாடல்)


2 comments :

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் எனக்கும் பிடித்த பாடல்..

Mohan said...

இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் அருமையாக இருக்கும்!

Post a Comment